கடற்பாசி வளர்ப்பு
கடற்பாசி வளர்க்க ஆழம் குறைவான அதே சமயம் சீற்றம் குறைந்த கடற்பகுதி தேவை. தமிழ் நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் மிகவும் உகந்த இடம்.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்டம் 237 கிமீ கடற்கரை நீளத்தில் வடக்குப் பகுதியில் பாக் நீரிணையும், தெற்கு பகுதியில் மன்னார் வளைகுடாவையும் கொண்டதாகும்.
இக்கடல் கரை பகுதியானது ஆழம், மற்றும் சீற்றம் குறைவான பகுதியாகும். இப்பகுதியானது கடற்பாசி வளர்ப்புக்கு உகந்த இடமாக காணப்படுகிறது.
கிராமங்கள்
குறிப்பாக இம்மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான சம்பை, மாங்காடு, சின்னபாலம், சின்ன ஏர்வாடி, சீனியப்பாதர்ஹா, வேதாளை, கீழக்கரை, பெரியப்பட்டிணம், முனைக்காடு, தொண்டி, தோணித்துரை, சோழியாகுடி, மற்றும் புதுப்பட்டிணம் ஆகிய இடங்களில் கடற்பாசி வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகிறது.
இப்பகுதிகளில் மீன்வளத்துறையின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏற்கனவே பல மீனவ பெண்கள் கடற்பாசி வளர்ப்பு மேற்கொண்டு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றனர்.
அரசு மானியம் மற்றும் உதவிகள்
கடற்பாசி வளர்ப்பு மேற்கொள்ள விருப்பமுள்ள மீனவ பெண்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய மீன் வள அபிவிருத்தி வாரிய திட்டத்தின் மூலம் கடற்பாசி வளர்ப்பதற்கான மூலப்பொருட்கள் வாங்கிட மேற்கொள்ளும் செலவினத்தில் 60% மானியமாக வழங்கும் திட்டமானது தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடற்பாசி வளர்ப்பு ஷமேற்கொள்ள விருப்பமுள்ள மீனவ பெண்கள் 3 பேர் இணைந்து ஒரு குழுவாக விண்ணப்பிக்கும் பட்சத்தில் அக்குழுவின் 40 கடற்பாசி வளர்ப்பு மிதவைகள் செய்வதற்கான செலவீனத்தில் ( ஒரு மிதவைக்கு ரூபாய் 1000/- என்ற கணக்கீட்டின்படி) 60% மானியமாக ரூ24000/- வரை அதிகபட்சமாக மானியத்தொகையாக பெறலாம்.
பயன்யடைந்தவர்கள்
இத்திட்டத்தின் கீழ் இதுவரை இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 குழுக்களில் உள்ள 60 மீனவ பெண்கள் பயனடைந்து கடற்பாசி வளர்ப்பு மூலம் லாபமீட்டி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி உள்ளனர்.
தொழில் வாய்ப்புக்கள்
மற்றவர்களும் கடற்பாசி வளர்ப்பு திட்டம் மேற்கொள்ளலாம், ஆனால் மானியம் அரசிடமிருந்து பெற முடியாது. ஆனால் கடற்பாசி வளர்க்கும் மீனவ பெண்களிடமிருந்து வாங்கி சந்தை படுத்துவதன் மூலம் அதிக (50%) லாபமீட்டலாம்.
வாழ்த்துக்கள்!!!
நன்றி!!!
No comments:
Post a Comment
Thank you